மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகை லலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகை லலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொச்சியில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது. லலிதாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. 1960ம் ஆண்டுகளில் நாடகங்களில் நடித்து வந்த லலிதா, 1970ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கூட்டுக்குடும்பம் என்ற படத்தில் அறிமுகமானார்.
550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், 1990ம் ஆண்டு அமரம் படத்துக்காகவும், 2,000மாவது ஆண்டில் சந்தம் படத்துக்காகவும் தேசிய விருது பெற்றார்.
தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கமல் - சிவாஜி நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவி தான் நடிகை லலிதா. இவரை மலையாள சினிமா துறையினர் மகேஸ்வரி அம்மா என அழைக்கின்றனர்.
இவரின் கணவரான இயக்குனர் பரதன் கடந்த 1998ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த லலிதாவுக்கு சித்தார்த், ஸ்ரீகுட்டி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சித்தார்த் இயக்குனராகவும், நடிகராகவும் உள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.