காரில் விழுந்த கான்கிரீட் துண்டு... அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகை...!

கொச்சி மெட்ரோ பணிகள் நடக்கும் பாலத்தின் மேல் பகுதியில் இருந்து கான்கிரீட் துண்டு அர்ச்சனா கவி சென்ற காரில் விழுந்துள்ளது.

news18
Updated: June 8, 2019, 3:31 PM IST
காரில் விழுந்த கான்கிரீட் துண்டு... அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகை...!
நடிகை அர்ச்சனா கவி
news18
Updated: June 8, 2019, 3:31 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அர்ச்சனா கவி சென்ற கார் மீது கான்கிரீட் துண்டு விழுந்ததில், அதிர்ஷடவசமாக உயிர்பிழைத்தார்.

தமிழில் அரவான், ஞான கிறுக்கன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அர்ச்சனா கவி. மலையால சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர், நகைச்சுவை நடிகர் அபிஷ் மாத்யூவை 2016-ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகியே இருந்து வருகிறார்.

இந்நிலையில், வெளியூர் செல்வதற்காக தனது குடும்பத்திருடன் காரில் கொச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, திடீரென கான்கிரீட் துண்டு அவரது காரின் முன்பகுதியில் விழுந்தது.

கொச்சி மெட்ரோ பணிகள் நடக்கும் பாலத்தின் மேல் பகுதியில் இருந்து கான்கிரீட் துண்டு அர்ச்சனா கவி சென்ற காரில் விழுந்துள்ளது. திடீரென நடந்த இந்த விபத்தால், கார் நிலைதடுமாறியது.இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தாலும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. காரின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, கொச்சி மெட்ரோ நிர்வாகம் தனது டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த மெட்ரோ நிர்வாகம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

First published: June 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...