தளபதி 65 படத்தில் விஜய்யுடன் தான் நடிப்பதை இளம் நடிகை ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் அடுத்தப் படத்தில் நடிகர் விஜய் ஒப்பந்தமாகியிருக்கிறார். ’தளபதி 65’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று இந்தப் படத்தின் பூஜை நடைப்பெற்றது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா நடிக்கிறார். இதற்கு முன்பு மிஷ்கின் இயக்கியிருந்த ‘முகமூடி’ படத்தில் நடித்திருந்த அவர், 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், மலையாள நடிகை அபர்ணா தாஸ், ’தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தளபதி 65 படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். ‘தளபதி 65’ எனும் மிகப்பெரிய படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என பூஜை படத்துடன் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அறிமுகமவே விஜய் படம் என்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம் அபர்ணா.
ஆனால் அவரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. அனிருத் இசையமைக்கும் ‘தளபதி 65’ படத்தில் இரட்டையர்கள் அன்பறிவ் சண்டை இயக்குநர்களாக பணியாற்றுகிறார்கள். நேற்று நடந்த பூஜை படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில் வெளியிட்டது. அவ்வளவு தான்... வழக்கம் போல அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்