சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்ட மலையாள நடிகர்கள்

கொரோனா பேரிடரில் இருந்து திரைத்துறையை மீட்டெடுக்க மலையாள நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டிருக்கின்றனர்

சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்ட மலையாள நடிகர்கள்
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படத்துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்து வரும் நிலையில் மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை 50 சதவிகிதம் குறைத்துக்கொள்ள முன்வந்திருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

வித்தியாசமான கதைக்களம் அழகான காட்சியமைப்பு என ஒட்டுமொத்த இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தி வரும் மலையாள திரையுலகம் ஆன்லைன் பைரசி தடுப்பு போன்ற பல விஷயங்களில் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. அந்த வகையில் கொரோனா பேரிடரில் இருந்து திரைத்துறையை மீட்கவும் பல நடவடிக்கைகளை மலையாள திரையுலகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை 50 சதவிகிதம் குறைத்துகொள்ள முன்வந்துள்ளனர்.

இதுதொடர்பாக அண்மையில் கொச்சியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு அதன் முடிவில் ஊதியம் குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மலையாள திரையுலகை பொறுத்தவரை அதன் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் அதிகபட்சமாக ஒரு படத்துக்கு 5 முதல் 8 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்


அதேபோல் மற்றொரு முன்னணி நாயகனான மம்முட்டி ஒரு படத்துக்கு 4 முதல் 5 கோடியும் பிருத்விராஜ் 2 முதல் 3 கோடியும் சம்பளமாக பெறுகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக நிவின் பாலி, துல்கர் சல்மான் ஆகியோர் 2 கோடி ஃபஹத் ஃபாசில் 60 லட்சம் என மலையாள உலகின் முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்துக்கு தங்களுடைய சம்பளமாக நிர்ணயித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் 50 சதவிகிதம் வரை சம்பளம் குறைத்துகொள்ள ஒப்புக்கொண்டிருப்பது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்திருப்பதுடன் சோர்ந்திருக்கும் திரையுலகை மீண்டும் புத்துயிர் பெற செய்யும் எனவும் கூறப்படுகின்றன.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading