மனைவி தற்கொலை: கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர்

மனைவியுடன் உன்னி

கடந்த 11-ஆம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்த பிரியங்கா, 12-ஆம் தேதி புதன் கிழமை பகல் 2 மணியளவில் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 • Share this:
  மனைவியை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்த நடிகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது.

  மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உன்னி தேவ். இவர் இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹீம், ஆடு, ஷிபு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு, பிரியங்கா என்பவருடன் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

  திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் இருவரும் எர்ணாகுளம் அங்கமாலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உன்னி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

  இதனால் கடந்த 11-ஆம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்த பிரியங்கா, 12-ஆம் தேதி புதன் கிழமை பகல் 2 மணியளவில் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26. இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக வட்டப்பாறா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்திருந்தார் பிரியங்கா, அதில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் பணம் கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

  பிரியங்காவின் சாவுக்கு உன்னி தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதோடு அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டது. இதறிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த உன்னியை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

  மனைவி இறந்த விவகாரத்தில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: