Thalapathy 65: தளபதி 65 மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் முக்கிய மலையாள நடிகர்!

விஜய் - டாம் சாக்கோ

ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறும் ஃபேன்டஸி கதை. டாம் சாக்கோ தனது வில்லன் நடிப்பிலிருந்து விலகி காமெடி செய்திருந்தார்.

  • Share this:
    மலையாளத்திலிருந்து மேலுமொரு நடிகர் விஜய்யின் 65 வது படத்தில் அறிமுகமாகிறார்.

    மலையாள நடிகைகள் அதிகளவில் தமிழில் நடித்தனர். இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஆனால், நடிகர்கள் குறைவு. மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என முன்னணி நடிகர்கள் தமிழில் நடித்தாலும் நிலைத்ததில்லை. சமீபமாக மலையாள வில்லன், குணச்சித்திர, நகைச்சுவை நடிகர்களும் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். இதில் புதிய வரவு ஷைன் டாம் சாக்கோ.

    ராஜீவ் ரவியின் அன்னாயும் ரசூலும் படத்தில் ஷைன் டாம் சாக்கோவுக்கு நல்ல வேடம். தனித்து அடையாளம் காணப்பட்டார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். இஷ்க், உண்ட, லவ் போன்றவை முக்கியமானவை. இதிகாசா படத்தில் டாம் சாக்கோ நாயகன். ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறும் ஃபேன்டஸி கதை. டாம் சாக்கோ தனது வில்லன் நடிப்பிலிருந்து விலகி காமெடி செய்திருந்தார். சுருக்கமாக, எந்த வேடத்தையும் செய்யும் திறமைசாலி. போதை மருந்து பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதை தவிர்த்துப் பார்த்தால், டாம் சாக்கோ நல்ல நடிகர்.

    நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் டாம் சாக்கோ நடிக்கிறார். தமிழ் அவ்வளவாக தெரியாது, ஆனால் மேனேஜ் செய்து கொள்வேன் என்பவர், சென்னையில் நடக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. சென்னை படப்பிடிப்புக்காக பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கு தயாராகிறது. கொரோனா பரவல் உச்சமடைந்திருக்கும் நிலையில், இம்மாதம் நடக்க வேண்டிய படப்பிடிப்பை ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.

    விஜய்யின் 65-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ஜார்ஜியாவில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: