மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 63 வயதான நடிகரும் அரசியல்வாதியுமான அவர், தனது உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
"முன்னெச்சரிக்கைகளுடன் இருந்தபோதிலும், நான்
கொரோனா தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தேன். இதையடுத்து என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். லேசான காய்ச்சலைத் தவிர, நான் தற்போது நன்றாக இருக்கிறேன், ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த நேரத்தில், ஒவ்வொருவரும் தங்கள் சமூக விலகல் முறைகளில் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வார தொடக்கத்தில், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட செய்தியை பகிர்ந்தார். “தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நான் நேற்று
கோவிட் தொற்றுக்கு பாசிட்டிவாக சோதனை செய்தேன். லேசான காய்ச்சல் தவிர, நான் நன்றாக இருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அதோடு மம்மூட்டி தனது ரசிகர்களையும் பின்தொடர்பவர்களையும் பாதுகாப்பாக இருக்குமாறும், COVID-19 தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.
லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!
இதற்கிடையே கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், சில தினங்களுக்கு முன்னர் தான் கொரோனாவிலிருந்து மீண்டதாக தெரிவித்தார். அதோடு நடிகை த்ரிஷா, நடிகர்கள் வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்டவர்களும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.