Beast: விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

ஷைன் டாம் சாக்கோ

மலையாளத்தின் பிரபல நடிகர்கள் தமிழில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

  • Share this:
    விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மலையாளத்தின் பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ இதில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

    கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அதன் பிறகு கொரோனா இரண்டாம் அலையால் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், சென்னையில் அமைத்திருந்த பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கில் படப்பிடிப்பை தொடர்ந்தனர். தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    Beast:  விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!
    ஷைன் டாம் சாக்கோ


    பீஸ்டில் மலையாளத்தின் பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறார். இதற்காக நேற்று அவர் விமானத்தில் சென்னை வந்தார். நேராக அவர் பீஸ்ட் படப்பிடிப்புக்கு சென்று அதில் கலந்து கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மலையாளத்தின் பிரபல நடிகர்கள் தமிழில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஷைன் டாம் சாக்கோ சின்னச்சின்ன வேடங்களில் முதலில் நடித்து வந்தார். இ அடுத்த காலத்து, அன்னாயும் ரசூலும் போன்ற படங்கள் அவரது திறமையை வெளிக்கொண்டு வந்தன. முக்கியமான நடிகரானார். 2014-ல் இதிகாசா திரைப்படத்தில் நாயகனாகும் வாய்ப்பு அமைந்தது. அடுத்த வருட ஆரம்பத்தில் அவரும் சில நடிகைகளும் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர். அவரது சினிமா வாழ்வில் பின்னடைவு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அவர் நடித்த இஷ்க் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

    மலையாளத்திலிருந்து தமிழுக்கு அழைத்துவரப்படும் நடிகர்கள் பெரும்பாலும் துணை நடிகர்கள் போன்றே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். அதற்கு மாறாக ஷைன் டாம் சாக்கோவுக்கு நல்ல வேடம் பீஸ்டில் அமையும் என நம்புவோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: