Fahadh Faasil: தமிழை தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தும் பகத் பாசில்!

Fahadh Faasil: தமிழை தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தும் பகத் பாசில்!

பகத் பாசில்

தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் மலையாள நடிகர் பகத் பாசில்.

  • Share this:
    தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் மலையாள நடிகர் பகத் பாசில்.

    இன்றைய தேதியில் இந்தியாவின் திறமையான நடிகர் என்றால் சந்தேகமில்லாமல் அது பகத் பாசில் தான். எந்த வேடத்தையும் அனாயாசமாகச் செய்யக் கூடியவர் என்பதைத் தாண்டி, புதுப்புது கதாபாத்திரங்களை தனது உடல்மொழியால் படைக்கக் கூடியவர் என்ற நிலையை எட்டியிருக்கிறார். சமீபத்தில் வெளியான மலையாளப் படம் ஜோஜி இதற்கு ஓர் உதாரணம்.

    ஜோஜியில் பகத் நடிக்கவில்லை. சாதாரண உடல்மொழியில் ஓர் அசாதாரணமான கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்த மாயாஜாலத்தை அவர் எப்படி நிகழ்த்துகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
    தமிழில் வேலைக்காரன் படத்தில் அறிமுகமான பகத், அடுத்து சூப்பர் டீலக்ஸில் நடித்தார். மூன்றாவது படமாக கமலின் விக்ரமில் நடிக்க இருக்கிறார்.

    இதையடுத்து விரைவில் தெலுங்குப் படத்திலும் பகத் அறிமுகமாகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் டீஸர் வெளியாகி 3.8 கோடி பார்வைகள், 1 கோடி லைக்குகள் என்று பட்டையை கிளப்பியதே, அந்த புஷ்பாவில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது அவரின் முதல் தெலுங்குப் படமாகும்.

    புஷ்பாவில் செம்மர கடத்தல்காரராக அல்லு அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது. வழக்கமான அவரது எலும்பு உடைக்கும் சண்டைக்காட்சிகள் இன்னும் உக்கிரமாக இதில் இடம்பெறுகின்றன. சுகுமார் படத்தை இயக்குகிறார். இதில் தான் பகத் முக்கிய வேடமேற்க இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: