ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரமின் சியான் 61 படத்தில் ராஷ்மிகாவுக்கு பதில் மாளவிகா மோகன்

விக்ரமின் சியான் 61 படத்தில் ராஷ்மிகாவுக்கு பதில் மாளவிகா மோகன்

மாளவிகா மோகனன் - ராஷ்மிகா மந்தனா

மாளவிகா மோகனன் - ராஷ்மிகா மந்தனா

சமீபத்தில் இப்படத்திற்கான தனது தோற்றத்தை இறுதி செய்தார் விக்ரம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் விக்ரமின் 61-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பதில் மாளவிகா மோகன் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  சியான் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஆக்‌ஷன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'சியான் 61' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது, 'சியான் 61' படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

  முதலில் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் பிஸியாக இருப்பதால், விக்ரம் படத்துக்கு ராஷ்மிகாவால் தேதி ஒதுக்க முடியவில்லை. எனவே, ராஷ்மிகா மந்தனா இதிலிருந்து விலகினார். இதையடுத்து 'சியான் 61' படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்தனர்.

  சசிகுமார், விஜய் மற்றும் தனுஷ் ஆகியோரை தொடர்ந்து நான்காவதாக சியான் விக்ரமுடன் இணைந்துள்ளார் மாளவிகா மோகனன். இதையடுத்து விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவிருக்கிறார். 'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது. அங்கு படக்குழு படத்தின் சில ஆரம்ப பகுதிகளை படமாக்குகிறது. சமீபத்தில் இப்படத்திற்கான தனது தோற்றத்தை இறுதி செய்தார் விக்ரம்.

  இணையத்தில் லீக்கான வாரிசு படத்தில் விஜய் பாடிய பாடல்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  'சியான் 61' 2டி மற்றும் 3டி-யில் படமாக்கப்படவுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் இந்தியுடன் பல மொழிகளிலும் பிரம்மாண்டமாக பான்-இந்திய படமாக வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் 2023-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Rashmika Mandanna, Malavika Mohanan