முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வயது மூத்த பெண்ணுடன் இளம் வயது பையனுக்கு காதல் - ''காதல் வயதைப் பார்க்காது'' - மாளவிகா மோகனன் அதிரடி

வயது மூத்த பெண்ணுடன் இளம் வயது பையனுக்கு காதல் - ''காதல் வயதைப் பார்க்காது'' - மாளவிகா மோகனன் அதிரடி

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

படம் தொடர்பாக ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை மாளவிகா மோகனன் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துவருகிறார். தங்கலான் பட டீசரில் மாளவிகா மோகனின் தோற்றம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா நடித்துவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மலையாளத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ள 'கிறிஸ்டி' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வயதான பெண்ணை காதலிக்கும் பதின் வயது சிறுவனின் கதை என்று கூறப்படுகிறது.

அல்வின் ஹென்றி இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.  உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டியூசன் டீச்சராக மாளவிகா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து படம் தொடர்பாக ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் வயது மூத்த பெண்ணுக்கும் இள வயது பையனுக்குமான காதல் குறித்து உங்கள் கருத்து. கிறிஸ்டி படம் இந்த டாபிக் தான் பேசுவதாக நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த மாளவிகா, காதல், காதல் தான் இல்லையா? காதல் தகுதி, வயது போன்றவற்றைப் பார்க்காது என நினைக்கிறேன்'' என்று பதிலளித்தார்.

First published:

Tags: Malavika Mohanan