முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: காதல் வயதை பார்க்காது... வெளியானது மாளவிகா மோகனனின் ’கிருஸ்டி’ பட ட்ரெய்லர்!

WATCH: காதல் வயதை பார்க்காது... வெளியானது மாளவிகா மோகனனின் ’கிருஸ்டி’ பட ட்ரெய்லர்!

’கிருஸ்டி’ பட ட்ரெய்லர்

’கிருஸ்டி’ பட ட்ரெய்லர்

Christy - Official Trailer | இந்தப் படம் வயதான பெண்ணை காதலிக்கும் பதின் வயது சிறுவனின் கதை என்று கூறப்படுகிறது. அல்வின் ஹென்றி இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பட்டம் போலே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து கன்னடம், இந்தி படங்களில் நடித்து வந்த அவர், ரஜினியின் ‘பேட்ட’ மூலம் தமிழுக்கு வந்தார். விஜய்யின் ‘மாஸ்டர்’, தனுஷின் ‘மாறன்’ படங்களில் நடித்தார். இவர் 5 வருடத்துக்குப் பிறகு ‘கிறிஸ்டி’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் வயதான பெண்ணை காதலிக்கும் பதின் வயது சிறுவனின் கதை என்று கூறப்படுகிறது. அல்வின் ஹென்றி இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டியூசன் டீச்சராக மாளவிகா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

' isDesktop="true" id="889435" youtubeid="Fyy8SmRcFao" category="cinema">

நன்றி: Think Music India.

First published:

Tags: Malavika Mohanan