• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Malavika Mohanan: ஷங்கர் படத்தின் ஹீரோயினாகும் மாளவிகா மோகனன்?

Malavika Mohanan: ஷங்கர் படத்தின் ஹீரோயினாகும் மாளவிகா மோகனன்?

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

2013-ல் பட்டம் போலே என்ற மலையாளப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்களில் நடித்தார்.

  • Share this:
    ஷங்கர் தெலுங்கில் இயக்கும் படத்தின் நாயகி யார் என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. தற்போது மாளவிகா மோகனனின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    இந்தியன் 2 தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால், அப்படத்தை பாதியிலேயே விட்டு, தெலுங்கில் ராம் சரணை இயக்கும் வேலையை ஆரம்பித்தார் ஷங்கர். அத்துடன் தனது அந்நியன் படத்தை ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளையும் ஆரம்பித்தார். இதில் எந்தப் படம் முதலில் தொடங்கப்படும் என்பது தெரியாத நிலையில், வழக்கு, சர்ச்சை என பல பஞ்சாயத்துகள். தற்போது எல்லாம் அடங்கிய நிலையில் மீண்டும் ராம் சரண் படத்தை தொடங்குவதற்கான பணிகள் நடக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பதில் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவியது. முதலில் அலியா பட் என்றனர். பிறகு கியாரா அத்வானியின் பெயர் அடிபட்டது. தற்போது மாளவிகா மோகனன் நடிக்கலாம் என்கிறார்கள்.

    2013-ல் பட்டம் போலே என்ற மலையாளப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்களில் நடித்தார். இந்தியில் ஒரு படத்திலும், தனுஷுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஷங்கர் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது.

    இன்னும் சில தினங்களில் ஷங்கர் படத்தின் நாயகி யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: