தானே முன்வந்து ‘தளபதி’ 64 அப்டேட் கொடுத்த ஹீரோயின்!

news18
Updated: November 6, 2019, 2:47 PM IST
தானே முன்வந்து ‘தளபதி’ 64 அப்டேட் கொடுத்த ஹீரோயின்!
மாளவிகா மோகனன்
news18
Updated: November 6, 2019, 2:47 PM IST
‘தளபதி 64’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. தற்காலிகமாக ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.


சமீபத்தில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு படப்பிடிப்புக்கு பெரும் தடையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தனது இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக நடிகை மாளவிகா மோகனன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Loading...First published: November 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...