என்ன மாதிரி இல்லாம பாதுகாப்பா இருங்க - மாஸ்டர் பட ஹீரோயின் பதிவு!

என்ன மாதிரி இல்லாம பாதுகாப்பா இருங்க - மாஸ்டர் பட ஹீரோயின் பதிவு!
மாளவிகா மோகனன்
  • Share this:
சமூகவலைதளத்தில் தன்னுடைய புகைப்படத்தைப் பதிவுசெய்து அதனுடன் கொரோனா விழிப்புணர்வு மெசேஜும் கூறியுள்ளார் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன்.

இந்தியாவில் காட்டுத் தீ போல் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 5274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் குணமடைந்துள்ளனர். 149 பேர் மரணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.


அந்தவகையில் தனது புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன்,  “சானிடைஸர் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுங்கள். (இந்த ஃபோட்டோவில் இருக்கும் என்னைப்போல் இல்லாமல் ) வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய தொகுப்பாளினி - வீடியோFirst published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading