நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில், பெயர் குறிப்பிடாமல் மருத்துவமனை காட்சியில் கூட ஒரு நடிகை மேக்கப் போட்டு நடித்திருப்பதாக தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். நயன்தாராவைத் தான் மாளவிகா மறைமுகமாக விமர்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் கனெக்ட் படம் வெளியான போது நயன்தாரா அளித்த பேட்டியில் மாளவிகாவின் விமர்சனத்துக்கு பதிலளித்திருந்தார். அதில், ஒரு நடிகை மருத்துவமனை காட்சியில் மேக்கப் போட்டு நடித்தது குறித்து பேசியிருந்தார். மருத்துவமனை காட்சியில் மிக அழகாக மேக்கப் போட்டு இருக்க வேண்டியதில்லை தான். அதற்காக முடியெல்லாம் விரித்துப் போட்டு இருக்க முடியாது.
அது கமர்ஷியல் படம். யதார்த்தமான படத்துக்கும் கமர்ஷியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. யதார்த்த படங்களில் அந்த கேரக்டர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால் போதும். அதில் என் இயக்குநர் இவ்வளவு சோகம் வேண்டாம் என்று என்னை அப்படி நடிக்க வைத்தார் என்று விளக்கமளித்திருந்தார். நயன்தாராவும் மாளவிகாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
There Is No Lady Super Star #Malavikamohanan pic.twitter.com/3aKLdUK0ER
— chettyrajubhai (@chettyrajubhai) February 11, 2023
இதன் ஒரு பகுதியாக மாளவிகா தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் தொடர்பாக மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நயன்தராவை மீண்டும் சீண்டியுள்ளார். அந்த பேட்டியில் மாளவிகாவிடம் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது, உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கை இல்லை. நடிகைகளை சூப்பர் ஸ்டார் என்று மட்டும் அழைக்கலாம்.
லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என அழைத்தால் போதும். தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்ஸ் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே'' என்று குறிப்பிட்டுள்ளார். நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்களில் அவருக்கு டைட்டிலில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Malavika Mohanan, Nayanthara