முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாங்களும் டியூசனுக்கு வரலாமா? - மாளவிகாவின் 'கிறிஸ்டி' பட டீசர் குறித்து வைரலாகும் மீம் - மாளவிகாவின் ரியாக்ஷன் இதுதான்

நாங்களும் டியூசனுக்கு வரலாமா? - மாளவிகாவின் 'கிறிஸ்டி' பட டீசர் குறித்து வைரலாகும் மீம் - மாளவிகாவின் ரியாக்ஷன் இதுதான்

மேத்யூ தாமஸ் - மாளவிகா மோகனன்

மேத்யூ தாமஸ் - மாளவிகா மோகனன்

நாங்களும் டியூசன்படிக்க வரலாமா என்று மாளவிகா கேட்பது போல மீம் ஒன்று வைரலாகிவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றப்படம் பேட்ட. இந்தப் படத்தில் சசிகுமாரின் ஜோடியாக சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

தொடர்ச்சியாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் தமிழின் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் தனுஷின் மாறன் படம் மட்டுமே வெளியாகியிருந்தது.

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்துவருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ள 'கிறிஸ்டி' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் வயதான பெண்ணை காதலிக்கு பதின் வயது சிறுவனின் கதை என்று கூறப்படுகிறது. அல்வின் ஹென்றி இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

' isDesktop="true" id="880777" youtubeid="UZoGXUhkifY" category="cinema">

இந்தப் படத்தின் டீசர் தற்போதுவெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டியூசன் டீச்சராக மாளவிகா நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் நாங்களும் டியூசன்படிக்க வரலாமா என்று மாளவிகாவிடம் கேட்பது போல மீம் ஒன்று ட்விட்டரில் வைரலாகிவருகிறது. அதற்கு நடிகை மாளவிகா சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

First published:

Tags: Cinema, Malavika Mohanan, Tamil cinema news, Tamil News