முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சென்னை வந்த மாளவிகா மோகனன்... ஏன் தெரியுமா?

சென்னை வந்த மாளவிகா மோகனன்... ஏன் தெரியுமா?

மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன்.

கோலார் தங்கத் தொழிற்சாலையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தங்கலான் இயக்கப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 1800-களில் நடக்கும் பீரியட் படம் என்றும், பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், தங்கலான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை மாளவிகா மோகனன் இன்று சென்னை வந்தார்.

இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி திருவோத்து மற்றும் பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை தனது ஸ்டுடியோ கிரீன் பேனரில் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இது 3டியில் எடுக்கப்படும் என்று முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு இந்தியிலும் படமாக்கப்படும் என்றார்.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கத் தொழிற்சாலையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் ஸ்கிரிப்ட் இறுதி செய்யப்பட்டு பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Malavika Mohanan