பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்தினாரா? - மாளவிகா மோகனன் கொடுத்த ரிப்ளை

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் பதிலளித்திருக்கிறார்.

பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்தினாரா? - மாளவிகா மோகனன் கொடுத்த ரிப்ளை
விஜய் உடன் மாளவிகா மோகனன்
  • Share this:
பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மாஸ்டர் ரிலீசுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அவருக்காக ஸ்பெஷல் பர்த்டே காமென் டிபியை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடினர். அதேவேளையில் மாஸ்டர் படக்குழுவும் மாளவிகா பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் உங்களுக்கு வாழ்த்து சொன்னாரா என்று கேட்க, ஆமாம். அவர் மிகவும் இனிமையானவர் என்று கூறினார் மாளவிகா மோகனன்.


தமிழில் வெற்றிமாறன் உடன் ஒருமுறையாவது இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று தனது எண்ணத்தை தெரிவித்திருக்கும் மாளவிகா மோகனன், முதல் இரண்டு படத்திலேயே ரஜினிகாந்த், விஜய் போன்ற ஆளுமைகளோடு பணியாற்றியது மறக்கமுடியாதது என்றும் கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் படத்தில் தனது பெயர் 'C' என்ற எழுத்தில் தொடங்கும் என்றும், இதற்கு மேல் படம் குறித்து பேசினால் லோகேஷ் கனகராஜ் கொன்று விடுவார் என்றும் அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.

மாஸ்டர் படக்குழுவுடன் சென்னையில் பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்ததாகவும் கொரோனாவால் அது நடக்கவில்லை என்றும் மாளவிகா மோகனன் இன்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading