Home /News /entertainment /

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா!

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா!

மலைக்கா அரோரா - நயன்தாரா - விக்னேஷ் சிவன்

மலைக்கா அரோரா - நயன்தாரா - விக்னேஷ் சிவன்

சில வருடங்கள் காதலில் இருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவனை சந்தித்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா, அவர்களுடன் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு அவர்களுக்கு தனது வாழ்த்துகளையுக்ம் தெரிவித்துள்ளார்.

    புதுமணத் தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சமீபத்தில் மும்பையில் சந்தித்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா, அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், புதுமணத் தம்பதிக்கு அருகில் நிற்பதைக் காண முடிகிறது.

    படத்தில் மலைக்கா சாடின் உடையில் ஸ்டைலாக இருக்கிறார். நயன்தாரா கறுப்பு டேங்க் டாப் மற்றும் ஆலிவ் கிரீன் பேன்ட்களில் கூலாக நிற்கிறார். பர்கண்டி சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் காணப்படுகிறார் விக்னேஷ் சிவன்.

    நயன் விக்கியுடன் மலைக்கா


    “வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்... உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் மலைக்கா.

    வீடு திரும்பிய நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டாரா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சில வருடங்கள் காதலில் இருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். அதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினிகாந்த், ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, அனிருத் மற்றும் இயக்குனர் அட்லி உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களின் திருமணத்தில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara, Vignesh Shivan

    அடுத்த செய்தி