Home /News /entertainment /

இந்தியன்-2 படத்தை வரவேற்கும் விதமாக எதுகை மோனை வசனங்களுடன் போஸ்டர் ஒட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

இந்தியன்-2 படத்தை வரவேற்கும் விதமாக எதுகை மோனை வசனங்களுடன் போஸ்டர் ஒட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எதுகை மோனை வசனங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எதுகை மோனை வசனங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்

ஊழலுக்கு ஆப்பு ரெடி என்ற தலைப்பில் மதுரை மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் "2021-ல் கமலை தவறவிட்டது கோவை". நாடு இருக்கும் சூழலில் நம்மவரின் சேவை, இந்திய அரசியலை சரி செய்ய தேவை என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Madurai
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படத்தை வரவேற்கும் விதமாக மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எதுகை மோனை வசனங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் நின்று தோல்வி அடைந்த நிலையில் அரசியலிலும், சினிமாவிலும் அவ்வபோது கவனத்தை செலுத்தி வருகிறார்.

சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் -2 திரைப்படமானது வெளியாக உள்ள நிலையில் அதனை வரவேற்கும் விதமாக மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள் எதுகை மோனை வசனங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

Also read... தனுஷ் பட நடிகை சாரா அலி கானின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

அந்த சுவரொட்டியில் "ஊழலுக்கு ஆப்பு ரெடி" 40/40 என்றும், "2021 ல் இவரை தவறவிட்டது கோவை" நாடு இருக்கும் சூழலில் நம்மவரின் சேவை" இந்திய அரசியலை சரி செய்ய தேவை" என இடம்பெறக்கூடிய வசனகளுடன் ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Indian 2, Kamal Haasan, Madurai, Makkal Needhi Maiam

அடுத்த செய்தி