Home /News /entertainment /

Ponniyin Selvan: சோழா சோழா பாடலின் மேக்கிங் வீடியோ!

Ponniyin Selvan: சோழா சோழா பாடலின் மேக்கிங் வீடியோ!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படத்தின் சோழா சோழா பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. 

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே தலைப்பில் இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் முதல் பாகத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

    சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் வெளியாகி, பலரின் காலர் ட்யூனாக மாறியது. இதற்கடுத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ’சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் வெளியானது.

    இணையத்தில் லீக்கான விஜய் - ராஷ்மிகாவின் ரொமாண்டிக் படம்



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது சோழா சோழா பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vikram, Mani ratnam

    அடுத்த செய்தி