ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி படத்துக்காக தயாராகும் அரங்கு

விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி படத்துக்காக தயாராகும் அரங்கு

 மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி

Vishal: பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படத்திற்கு அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அதனை மேற்பார்வையிட்டு வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. லொகேஷன் பார்க்க சென்ற இடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்  பகிர்ந்துள்ளார்.

விஷால் தற்போது லத்தி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பான் - இந்தியா திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். இதற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி பாட்ஷாவில் வில்லனாக நடித்த ரகுவரனின் கதாபாத்திரப் பெயர்  என்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் ஆதிக் ரவிச்சந்திரன் கதை சொல்லியிருக்கிறார். சுமார் 10 மணிநேரம் கதையையும், எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தையும் விளக்கியிருக்கிறார். இரண்டும் பிடித்துப்போக நடிக்க ஒப்புக்கொண்டார் எஸ் ஜே சூர்யா.

ஆனாலும் அவர் கேட்ட ஆறு கோடி சம்பளத்தை தருவதற்கு தயாரிப்பாளர் வினோத்குமார் முதலில் சம்மதிக்கவில்லை. பிறகு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கோடி ரூபாய் குறைத்து 5 கோடி ரூபாய்க்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு படம் போல இதுவும் தனக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தரும் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்திருந்தார்.

பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படத்திற்கு அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அதனை மேற்பார்வையிட்டு வருகிறார். லொகேஷன் பார்க்க சென்ற இடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Also read... ஏப்ரல் 14 பீஸ்டுடன் மோத இருக்கும் இரண்டு திரைப்படங்கள்...!

மார்க்க ஆண்டனியின் படப்பிடிப்பு இந்த மாதம் அதாவது பிப்ரவரியில் தொடங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். மினி ஸ்டுடியோ வினோத்குமார் இதனை தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர். தமிழில் தயாராகும் இந்தப் படத்தை மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடுகின்றனர்

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor vishal, S.J.Surya