Home /News /entertainment /

ஓ.டி.டி.-யில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் லிஸ்ட்…

ஓ.டி.டி.-யில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் லிஸ்ட்…

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள முக்கிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களின் தொகுப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாப்பன் – மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் கோகுலம் கோபாலன், டேவிட் கச்சப்பிள்ளி, ராபிமதிரா இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் ஜேனரில் வெளிவந்த படம். பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடி வசூலான படம் ஜீ5 –ல் செப்டம்பர்7-ம்தேதி வெளியாகிறது.



    சீதா ராமம் – துல்கர் சல்மான் – மிருணல் தாகூர் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளிவந்த படம். ரொமான்டிக் பீரியட் டிராமா ஜேனரில் வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவம் வரவேற்பை பெற்றது. அமேசான் ப்ரைமில் வரும் 9-ம்தேதி வெளியாகிறது.



    தல்லுமாலா – காமெடி ஆக்சன் ஜேனரில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம். நெட்ஃப்ளிக்ஸில் வரும் 11-ம்தேதி ரிலீஸ்



    நர்கோ செயின்ட்ஸ் – இது ஒரு கொரியன் வெப்சீரிஸ். தென்னாப்பிரிக்காவில் செயல்பட்டு வரும் போதை பொருள் கடத்தல் தாதாவை பிடிக்க, ஒரு சாதாரண தொழில்முனைவோர் அரசின் சீக்ரெட் மிஷனில் இணைகிறார். டிராமா, த்ரில்லர் ஜேனரில் இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 6 எபிசோட்களை கொண்ட நர்கோ செயின்ட்ஸ் முதல் சீசன் நெட்ஃப்ளிக்ஸில் செப்டம்பர் 9 ம்தேதி வெளியாகிறது.





    கோப்ரா கை சீசன் 5 : ஐ.எம்.டி.பி.ரேட்டிங்கில் 8.5 புள்ளிகளைப் பெற்ற வெப் சீரிஸ். முதல் எபிசோட் கடந்த 2018 மே 2ம் தேதி வெளியான நிலையில் வரும் 9-ம்தேதி 5வது சீசன் நெட்ஃப்ளிக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.



    இன்ன தான் கேஸ் கொடு : குஞ்சாக்கோ போபன், காயத்ரி நடிப்பில் வெளியான மலையாளதிரைப்படம். ஐ.எம்.டி.பி.யில் 8.6 புள்ளிகளைப் பெற்ற படம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 8-ம்தேதி வெளியாகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: OTT Release

    அடுத்த செய்தி