ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த ராஜபக்சே

பொன்னியின் செல்வன் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த ராஜபக்சே

முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே

முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே

Mahinda Rajapaksa | இலங்கை கொழும்புவில் அவர் மனைவியுடன் புதன்கிழமை அன்று சென்று பார்த்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaColumboColumboColumboColumboColumbo

  இலங்கை முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே பொன்னியின் செல்வன் படத்தை இலங்கை கொழும்புவில் அவர் மனைவியுடன் புதன்கிழமை பார்த்தார். அவர் உடன் அமைச்சர்கள் சிலரும் சென்று இருக்கின்றனர்.

  கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கியுள்ளார். முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியதேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யாராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  Read More: கௌதம் வாசுதேவ் மேனன்-ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 13 படத்தின் டீசர் வெளியானது!

   ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு இடையே பொன்னியின் செல்வன் வசூலை குவித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த படம் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு  நிறுவனம் தெரிவித்துள்ளது.

  3-வது வார இறுதி வரை உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 56 மில்லியன் டாலர் (461 கோடி) வசூலித்துள்ளது. ரஜினிகாந்தின் 2.0-க்குப் பிறகு உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.

  பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும், குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் மணிரத்னம் சமீபத்திய ஊடக உரையாடலில் கூறியிருந்தார். இப்படம் 2023 கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் , பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இலங்கையின் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்துள்ளார்.  இலங்கை பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து வெளிநாட்டிற்கு சென்ற ராஜபக்சே சில வாரங்களுக்கு முன்புதான் இலங்கை திரும்பினார். இந்நிலையில்தான் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துள்ளார். அவருடன் சில தமிழ் எம்பிக்களும் இருந்தனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Former President of Sri Lanka Mahinda Rajapaksa, Ponniyin selvan, Srilanka