சர்வதேச விருது பெறும் மஹிமா நம்பியார் - குவியும் வாழ்த்துகள்!

மகிமா நம்பியார்

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மகிமா நம்பியார், சிறந்த துணை நடிகைக்கான விருதை பெறவிருக்கிறார்.

 • Share this:
  ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை மகிமா நம்பியார் வென்றுள்ளார்.

  மஹிமா நம்பியார் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான 'சாட்டை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதையடுத்து ’புரியாத புதிர்’, ’கொடிவீரன்’, ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

  இதையடுத்து மெளனகுரு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமாரின் ‘மகாமுனி’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் மஹிமா நம்பியார். இதில் ஆர்யா, இந்துஜா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், மகாமுனி படத்திற்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மகிமா நம்பியார், சிறந்த துணை நடிகைக்கான விருதை பெறவிருக்கிறார்.  இத்தகவலை தனது ட்விட்டரில் அறிவித்திருக்கும் மஹிமா, இயக்குனர் சாந்த குமார், நடிகர் ஆர்யா, நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். விருது பெறும் மஹிமா நம்பியாருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: