• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சங்கராந்திக்கு ஹவுஸ்ஃபுல் - ஏப்ரலுக்கு தள்ளிப்போன மகேஷ் பாபு படம்!

சங்கராந்திக்கு ஹவுஸ்ஃபுல் - ஏப்ரலுக்கு தள்ளிப்போன மகேஷ் பாபு படம்!

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா ஜனவரி 12 வெளியாகும் என கூறப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடும் போட்டி காரணமாக மகேஷ் பாபுவின் படம் ஜனவரியிலிருந்து ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.

நமக்கு பொங்கல் என்றால் தெலுங்கு பேசும் மக்களுக்கு சங்கராந்தி. பொங்கல் வரும் அதே மாதம் தேதியில் சங்கராந்தியும் வரும். 2022 சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி பிரபாஸின் ராதே ஷ்யாம் வெளியாகிறது. அதற்கு ஒருவாரம் முன்பு ஜனவரி 7 ஆம் தேதி ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் வெளியாகிறது. இரண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன

மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா ஜனவரி 12 வெளியாகும் என கூறப்பட்டது. பவன் கல்யாண், ராணா நடித்திருக்கும் பீம்ல நாயக் ஜனவரி 13 வெளியாகும் என கூறினர். அத்துடன் டாக்டர் ராஜசேகர் நடித்துள்ள சேகர் திரைப்படமும் வெளியாகிறது. இது மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ஜோசப் படத்தின் தெலுங்கு ரீமேக்.

Also read... எனக்கு தெரியாம நான் நடிக்கிற படமா? - அதிர்ச்சியான கௌதம் வாசுதேவ மேனன்!

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி என்ற இரு படங்கள் வெளியாவதற்கே திரையரங்குகள் இல்லை. எனிமி தயாரிப்பாளர் தலையில் துண்டுடன் திரையரங்கு பத்தலை என கண்ணீர் விடுகிறார். ஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ்நாட்டைவிட திரையரங்குகள் அதிகம். எனினும் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், சர்க்காரு வாரி பாட்டா, பீம்ல நாயக் என்று மெகா டெகா பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் தாங்கும் சக்தி இருக்கிறதா? எந்தப் படம் சங்கராந்தி போட்டியிலிருந்து வெளியேறும் என  எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சர்க்காரு வாரி பாட்டா ஏப்ரல் 1 திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

புத்திசாலித்தனமான முடிவு. இந்தப் படத்தைத் தொடர்ந்து பீம்ல நாயக்கும் சங்கராந்தியை தவிர்த்து வேறு தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: