Home /News /entertainment /

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவும் நடிகர் மகேஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவும் நடிகர் மகேஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவும் நடிகர் மகேஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைவிட 56.5% கூடுதலான எண்ணிக்கையில் இன்று பாதிப்பு பதிவாகி உள்ளது. ஓமைக்ரான் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பாதிப்பு சமீப வாரங்களாக கடுமையாக அதிகரித்து நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    Also read: பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

    அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 325 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,206 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். பாசிட்டிவிட்டி ரேட் 6.43% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,85,401 ஆக உள்ளது.

    மொத்த பலி எண்ணிக்கை 4,82,876 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 148.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 58,097 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது.

    இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், எனக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

    தொடர்ந்து, என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக்கொள்கிறேன். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், அது தீவிர தொற்று அறிகுறியையும், மருத்துவமனைக்கு செல்லும் அளவிலான ஆபத்தையும் குறைக்கும். தயவு செய்து கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Also read:  இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி