கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் மீண்டும் விளம்பரம் மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை திரையில் மீண்டும் காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பதால் டோலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் மகேஷ் பாபு இருந்த புகைப்படங்களை தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படத்தில், மகேஷ் பாபு மஞ்சள் நிற சட்டை மற்றும் பழுப்பு நிற பேண்ட் அணிந்து கையில் ஒரு காபி கப்பை வைத்துக்கொண்டு ஸ்கிரிப்ட் பேப்பரையும் வைத்திருக்கிறார்.
மேலும் அவருடன் உள்ள ஊழியர் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் முகக்கவசத்தை அணிந்திருப்பதையும் காணமுடிகிறது. இந்த விளம்பரத்தின் படப்பிடிப்பு நாளைக்குள் முடிக்கப்படும் என்று மகேஷ் பாபுவின் டீம் பகிர்ந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த விளம்பரம் படமாக்கப்படுகிறது.
மகேஷ் பாபு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இல்லாத போதிலும், சிறிது நேரத்தில் அவரது இந்த புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அடிக்கடி கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே நடிகர் மகேஷ் பாபு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதனிடையே கடந்த வாரம் தனது பிறந்தநாளன்று நடிகர் பவன் கல்யாணுடன் இருந்த ஒரு புகைப்படத்தை மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார்.
மகேஷ் பாபுவின் அடுத்த படமான 'சர்காரு வாரி பாட்டா' கொரோனா தொற்றுநோயின் தீவிரம் காரணமாக மெதுவாக தொடங்க உள்ளது. அந்தப் படத்தின் போஸ்டர்கள் முதன்முதலில் மே 31, அதாவது அவரது தந்தையின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.
இயக்குனர் 'பரசுரம்' இயக்கியுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்தில் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
45 வயதான நடிகர் மகேஷ் பாபு கடைசியாக "சரிலெரு நீகேவ்வரு" என்ற அதிரடி படத்தில் ஒரு ரகசிய பணிக்கு நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ மேஜரின் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.