Mahesh Babu: தந்தையின் பிறந்தநாளில் கிராமத்தினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய மகேஷ் பாபு!

மகேஷ் பாபு

இந்த ஆண்டு கொரோனா அலை காரணமாக கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தனது தந்தையின் பிறந்தநாளில் கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளார் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு.

    பிரபல தெலுங்கு நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணாவுக்கு மே 31-ம் தேதியான நேற்று பிறந்த நாள். வழக்கமாக அவர் பிறந்தநாளில் மகேஷ்பாபு நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அலை காரணமாக கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் தனது தந்தையின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து, தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கி இருக்கிறார் மகேஷ் பாபு. இதில் கிராம மக்கள் பலர் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த விஷயத்தை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் மகேஷ் பாபு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: