ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உங்களோடு அனைத்தும் போய்விட்டன... அப்பா மறைவு குறித்து மகேஷ் பாபு உருக்கமான பதிவு

உங்களோடு அனைத்தும் போய்விட்டன... அப்பா மறைவு குறித்து மகேஷ் பாபு உருக்கமான பதிவு

தந்தையுடன் மகேஷ் பாபு

தந்தையுடன் மகேஷ் பாபு

எனது இன்ஸ்பிரேஷன், எனது தைரியம், எனக்கு முக்கியமானவை என நான் நினைத்த அனைத்தும் உங்களோடு போய்விட்டன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது மறைந்த தந்தை கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவுக் குறிப்பு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தனது வாழ்க்கையில் தந்தை எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

  "உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்கள் மறைவு இன்னும் அதிகமாக கொண்டாடப்படுகிறது. அதுதான் உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சல் தான் உங்கள் இயல்பு. எனது இன்ஸ்பிரேஷன், எனது தைரியம், எனக்கு முக்கியமானவை என நான் நினைத்த அனைத்தும் உங்களோடு போய்விட்டன. ஆனால் வினோதமாக, இதுவரை நான் உணராத இந்த வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமற்றவன். உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்கள் லெகசியை முன்னெடுத்துச் செல்வேன். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ நானா.. மை சூப்பர் ஸ்டார்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் மகேஷ் பாபு.

  இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்த கமல் ஹாசன் - ஓர் எமோஷனல் தருணம்!

  கிருஷ்ணா தனது 79வது வயதில் காலமானார். நவம்பர் 15-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரின் பல உடல் உறுப்புகள் செயலிழந்ததும் சிகிச்சை பலனளிக்காததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Mahesh babu