நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தைத் தொடந்து விஜய்யின் அடுத்தப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதில் குறிப்பாக தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி தளபதி 66 படத்தை இயக்குவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வலம் வந்தன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையே தான் தளபதி 66 படத்தை இயக்குவதாக சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் அறிவித்தார் இயக்குநர் வம்சி.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது. தற்போது இதன் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிதாரா
இந்நிலையில்
தளபதி 66 படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் கதை பிடித்துப் போனதால், மகேஷ் பாபுவும் தனது மகளை நடிக்க வைக்க
க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக தெலுங்கு திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.