Mahesh Babu: மகேஷ்பாபு-ராஜமௌலி படத்தின் கதை - விஜயேந்திர பிரசாத் வெளியிட்ட தகவல்!

மகேஷ் பாபு - எஸ்.எஸ்.ராஜமெளலி

ராஜமௌலி இயக்குனராவதற்கு அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தே காரணம். இயக்குனராகும் கனவில் இருந்த விஜயேந்திர பிரசாத்துக்கு தனது இளமைக்காலத்தில் அது கைகூடவில்லை.

  • Share this:
    ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வரும் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். வழக்கம் போல் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இதன் கதையை எழுதுகிறார். அது குறித்து பேட்டியொன்றில் அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.

    ராஜமௌலி இயக்குனராவதற்கு அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தே காரணம். இயக்குனராகும் கனவில் இருந்த விஜயேந்திர பிரசாத்துக்கு தனது இளமைக்காலத்தில் அது கைகூடவில்லை. கதாசிரியராக சில படங்களில் பணியாற்றினார். அப்பாவின் கனவை தன் மூலம் நிறைவேற்றினார் ராஜமௌலி. அவரது படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுதினார். மகன் பிரபல இயக்குனராக உயர்ந்த பிறகு அவர் தனது கனவை நனவாக்கினார். தொடர்ந்து மகனின் படங்களுக்கு கதை எழுதினார். பிற இயக்குனர்களுக்கும் கதைகள் எழுதித் தந்தார். சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் கதை விஜயேந்திர பிரசாத்தினுடையதே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் கதையும் அவருடையதே. அடுத்ததாக மகேஷ் பாபு படத்துக்கான கதையை எழுதி வருகிறார். அது குறித்து பேசியிருப்பவர், "ராஜமௌலியும், நானும் கதையில் இன்னும் வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களிடம் சில ஐடியாக்கள் இருக்கின்றன. ஆப்பிரிக்கா காடு பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் அதிரடி கதை அதில் ஒன்று" என தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் மகேஷ் பாபு. அவரும் ராஜமௌலியும் இணையும் படத்தை இரண்டு மாநில மக்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ற கதையை தந்தையும், மகனுமாக உருவாக்குவார்கள் என்று நம்பலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: