திருமணத்தில் ஜாலியாக நடனமாடும் மஹத் - பிராச்சி தம்பதி - வீடியோ

தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை மஹத்தின் மனைவி பிராச்சி மிஸ்ரா சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமணத்தில் ஜாலியாக நடனமாடும் மஹத் - பிராச்சி தம்பதி - வீடியோ
மஹத் - பிராச்சி தம்பதி
  • Share this:
வல்லவன், காளை, மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருந்த மஹத், கடந்த 2018-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க தற்போது இவன் தான் உத்தமன், கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கு பெற்று வருகிறார்.

இவரும் முன்னாள் மிஸ் இந்தியா பிராச்சி மிஸ்ராவும் காதலித்து கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தில் சிம்பு, அனிருத் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து 3 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் மஹத், பிராச்சிக்கு தாலி கட்டுவது, திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக வெளியாகியிருக்கும் இந்த வீடியோ ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.

மேலும் படிக்க: மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் - காரணம் இதுதான்
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading