முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தல.... துணிவு செட்டில் அஜித் பண்ண சம்பவம் - மகாநதி சங்கர் நெகிழ்ச்சி

தல.... துணிவு செட்டில் அஜித் பண்ண சம்பவம் - மகாநதி சங்கர் நெகிழ்ச்சி

அஜித் குமார் - மகாநதி சங்கர்

அஜித் குமார் - மகாநதி சங்கர்

மகாநதி ஷங்கர் ஒரு நிகழ்வில் துணிவு படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கமல்ஹாசனின் மகாநதி படத்தில் ஜெயில் வார்டர்னாக மிரட்டியவர் சங்கர். இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகாநதி அவரது பெயருடன் ஓட்டிக்கொண்டது. பல படங்களில் வில்லன், காமெடி வேடங்களில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கிறார். அவரது கரகர குரல் அவருக்கு ஒரு பெரும் பலம்.

தற்போது சன் டிவியில் வானத்தைப் போல நிகழ்ச்சி அவருக்கு தனிப்பெரும் அடையாளத்தை பெற்றுத்தந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்தை தல என முதன்முதலில் அழைத்த பெருமையும் இவரையே சேரும். தீனா படத்தில் வத்திக்குச்சி பாடலுக்கு முன்பாக தல இருக்கும்போது வால் ஆடக் கூடாது. நீ ஆடு தல என அவர் சொன்னதை ரசிகர்கள் பிடித்துக்கொண்டார்கள்.

இந்த நிலையில் மகாநதி ஷங்கர் ஒரு நிகழ்வில் துணிவு படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருந்தார். இதனை ரசிகர்கள் வீடியோவாக டிரெண்ட் செய்துவருகிறார்கள். அதில், துணிவு பட செட்டுக்குள் நுழைந்தபோது அஜித் என்னை பத்து நிமிடம் கட்டிப்பிடித்தார்.
 
View this post on Instagram

 

A post shared by @imsathyadevபின்னர் ஒளிப்பதிவாளரிடம், முதன்முதலில் தல என்று அழைத்தது இவர்தான் என என்னை அஜித் அறிமுகப்படுத்தினார் என நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.

First published:

Tags: Actor Ajith, Thunivu