Home /News /entertainment /

மகானுக்காக விக்ரம், கார்த்திக் சுப்பராஜை புகழ்ந்து தள்ளிய அல்போன்ஸ் புத்திரன்

மகானுக்காக விக்ரம், கார்த்திக் சுப்பராஜை புகழ்ந்து தள்ளிய அல்போன்ஸ் புத்திரன்

அல்போன்ஸ் புத்திரன்

அல்போன்ஸ் புத்திரன்

மகான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியானது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தற்போது பார்க்கக் கிடைக்கிறது.

  • News18
  • Last Updated :
நேரம், பிரேமம் என இரண்டே படங்கள்தான் இயக்கியிருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். இந்த இரண்டு படங்களில் அவர் சம்பாதித்த ரசிகர்கள் ஏராளம். தற்போது கோல்ட் என்ற திரைப்படத்தை பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் இயக்கியிருக்கிறார். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

ரஜினியின் ஹார்ட்கோர் ரசிகராக தன்னை காட்டிக் கொள்ளும் அல்போன்ஸ் புத்திரன், அவ்வப்போது கமலிடமும் அவரது படங்கள் குறித்து கேட்பதுண்டு. எப்படி இதை அந்த காலத்திலேயே எடுத்தீர்கள் என்று அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்கள் குறித்து கேட்டிருக்கிறார். சமயத்தில் இவர் பாராட்டுகிறாரா, கிண்டல் செய்கிறாரா என்பதுகூட தெரியாத விதத்தில் கேள்விகளை வைப்பதில் வித்தகர்.



இப்போது தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், "மகான் ஒரு புத்திசாலித்தனமான படம். அந்நியனுக்கு பிறகு சரியான முறையில் விக்ரமை பயன்படுத்தியதற்கு நன்றி சுப்பு" என குறிப்பிட்டுள்ளார். மகான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரும் நிலையில் இப்படி ஒரு பாராட்டை அவர் கொடுத்துள்ளார். அத்துடன் "ஜிகர்தண்டாவை தாண்டி வந்து விட்டீர்கள் பாபி" என்று பாபி சிம்ஹாவையும் பாராட்டியிருக்கிறார். துருவ் விக்ரமின் தாதா கேரக்டர் சுவாரசியமாக இருந்தது என அவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார்.

Also read... ஜோக்கர் இயக்குனர் ராஜூ முருகனின் படத்தில் இணையும் கார்த்தி, விஜய் சேதுபதி...?

மகான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியானது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தற்போது பார்க்கக் கிடைக்கிறது. இந்தப்படத்தை ரஜினியும் வெகுவாக பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram, Karthik subbaraj

அடுத்த செய்தி