• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மகிழினி - ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஓர் இசை ஆல்பம்

மகிழினி - ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஓர் இசை ஆல்பம்

மகிழினி

மகிழினி

ட்ரெண்டிங் என்டர்டெயின்மெண்ட் மற்றும் கௌஸ்துயா மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த இசை ஆல்பத்தை நவம்பர் 22 ஆம் தேதி சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. கலாசார இறுக்கம் மிகுந்த இந்தியாவிலும் அவர்களுக்கான இருப்பை உறுதி செய்யும் நிகழ்வுகள் நடக்கவே செய்கின்றன. அப்படியொரு முயற்சிதான் மகிழினி.

ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாலசுப்பிரமணியன் என்பவர் இயக்கியிருக்கும் இசை ஆல்பம்தான் மகிழினி. இதற்கான பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பாடலை பாடியிருப்பவர் கீர்த்தனா வைத்தியநாதன். விஷ்வ கிரண் நடனம் அமைத்துள்ளார்.

ட்ரெண்டிங் என்டர்டெயின்மெண்ட் மற்றும் கௌஸ்துயா மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த இசை ஆல்பத்தை நவம்பர் 22 ஆம் தேதி சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது.

இந்த பாடலில் கௌரி  கிஷன், அனகா ஆகியோர் ஓரினச் சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனர். கௌரி  கிஷன் 96 படத்தில் த்ரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடித்தவர். பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அனகா ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தில் நடித்தவர். பிறகு சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் நடித்தார். இவரும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் மகிழினி ஆல்பத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடலில் துணிச்சலாக நடித்த இருவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த ஆல்பம் குறித்து பேசிய இயக்னர் பாலசுப்பிரமணியன், "LGBT என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களைப் பற்றி நமது சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் இந்த மகிழினி ஆல்பத்தை உருவாக்கியதன் நோக்கம்.

Also read... 83 - டிசம்பர் 24-ம் தேதி தமிழில் வெளியாகும் கபில்தேவின் வாழ்க்கை வரலாறு!

சென்னையை சேர்ந்த மலர் (கௌரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரத நாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின்போது அவர்களுக்குள் காதல் தீ பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த மகிழினி ஆல்பத்தின் கதை" என்றார். இவர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: