நடிப்பில் அசத்தும் ஆர்யா... மகாமுனி படத்தின் மேக்கிங் வீடியோ!

நடிப்பில் அசத்தும் ஆர்யா... மகாமுனி படத்தின் மேக்கிங் வீடியோ!
மகாமுனி
  • News18
  • Last Updated: September 3, 2019, 8:18 PM IST
  • Share this:
மகாமுனி படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘மௌன குரு’ படத்துக்கு பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கடந்த மே மாதத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. அப்போதிருந்தே இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் செப்டம்பர் 6-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக படம் உருவான விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

4 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் படத்தின் ஒளிப்பதிவு, படமாக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Loading...

முன்னதாக படத்தின் ஸ்னீக் பீக் காட்சியைப் பார்த்த இயக்குநர் கே.வி.ஆனந்த், “ஆர்யாவின் கை, கால் முதுகு எல்லாம் நடிக்குது. படக்குழுவுக்கும், ஆர்யாவுக்கும் பாராட்டுகள்” என்று கூறியிருந்தார்.

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...