மாஃபியா படத்தின் டீசரை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ்

மாஃபியா படத்தின் டீசரை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ்
மாஃபியா பட போஸ்டர்
  • News18
  • Last Updated: September 15, 2019, 4:20 PM IST
  • Share this:
மாஃபியா பட டீசரை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில் அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர்.


மும்முரமாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசரை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படத்தைத் தயாரித்து வரும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


முன்னதாக படத்தின் டீசரை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவையும் இயக்குநர் கார்த்திக் நரேனையும் பாராட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: பிகில் பாடலும் காப்பியா?

First published: September 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...