Home /News /entertainment /

விருமன் படத்திலிருந்து ‘மதுர வீரன்’ வீடியோ பாடல் வெளியானது...

விருமன் படத்திலிருந்து ‘மதுர வீரன்’ வீடியோ பாடல் வெளியானது...

விருமன்

விருமன்

Viruman Video songs : படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சாப்பூ கண்ணால, மதுரவீரன் உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது விருமன் படத்திலிருந்து வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விருமன் படத்திலிருந்து மதுரவீரன் வீடியோ பாடல் வெளியாகி வியூஸ்களை குவித்து வருகிறது.

    கொம்பன் படத்தை தொடர்ந்து, முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி விருமன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 12ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

    மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், கருணாஸ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    யோகி பாபு நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

    அப்பா – மகன், அண்ணன் - தம்பி இடையிலான உறவை விவரிக்கும் வகையில் விருமன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சாப்பூ கண்ணால, மதுரவீரன் உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது விருமன் படத்திலிருந்து வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் வானம் கிடுகிடுங்க என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் குரலில் மதுரை வீரன் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.



    விருமன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், அடுத்த மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    ஆர்யாவின் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    இதனைத்தொடர்ந்து கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகிறது. விருமன் படத்தில் நடித்த அதிதி சங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி