Home /News /entertainment /

போலி ஆவண வழக்கில் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

போலி ஆவண வழக்கில் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தனுஷ்

தனுஷ்

நடிகர் தனுஷ் தனது மகன் தான் என வழக்கு தொடர்ந்த  மேலூரை சேர்ந்த கதிரேசன் புதிதாக தாக்கல் செய்த சீராய்வு   மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

போலி ஆவணங்கள் தாக்கல் செய்த  வழக்கில் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள்  தாக்கல் செய்த நடிகர் தனுஷ் மீது, நடவடிக்கை எடுக்க கோரி புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை  மீண்டும் விசாரிக்க உத்தரவிட கோரி, சீராய்வு  மனு மீதான விசாரணையில் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

நடிகர் தனுஷ் தனது மகன் தான் என வழக்கு தொடர்ந்த  மேலூரை சேர்ந்த கதிரேசன் புதிதாக தாக்கல் செய்த சீராய்வு   மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுஷ் தனது மகன் தான் என்றும், வயது முதிர்வின் காரணமாக தனக்கும், தன்னுடைய மனைவி மீனாட்சிக்கும் மாதந்தோறும் ஜீவனாம்சத்தை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பில்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மேலூர் கோர்ட்டில் கதிரேசன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தில்  நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவை போலியானது. எனவே நீதிமன்றத்தில் போலி சான்றிதழ் தாக்கல் செய்ததற்காக தனுஷ்  மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது கோரிக்கை தொடர்பாக கீழ்கோர்ட்டில் பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

கண் தானம் செய்த 96, பிகில் பட நடிகை வர்ஷா! குவியும் வாழ்த்துகள்...

இதைத் தொடர்ந்து, மேலூர் கதிரேசன் கடந்த 05/10/2017-ல் மதுரை புதூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதில் உயர்நீதிமன்றத்தில் தனுஷ்  எனது மகன் என்பது தொடர்பான  வழக்கு விசாரணை நடைபெற்ற போது, தனுஷ் தரப்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். எனவே வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார். மேலும்,  உயர்நீதிமன்றத்தில் "தனுஷ் எனது மகன்"  என்பது தொடர்பான  வழக்கு விசாரணை நடைபெற்ற போது, தனுஷ் தரப்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில், போலிசார் விசாரணை நடத்தி,  இறுதி அறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  மேலூர் கதிரேசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீது மதுரை 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி முத்துராமன், 05/12/2020 ல், போதிய முகாந்திரம் இல்லை என தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வருடம் தவறாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ரம்ஜான் பிரியாணி அனுப்பும் நபர்... அவரே வெளியிட்ட புகைப்படம்!

இந்த நிலையில் தற்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில்,  மேலூர் கதிரேசன் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், உயர்நீதிமன்றத்தில் "தனுஷ்  எனது மகன்"  என்பது தொடர்பான  வழக்கு விசாரணை நடைபெற்ற போது தனுஷ் தரப்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில்,  புதூர் போலீசார் விசாரணை நடத்தி,  இறுதி அறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, தனுஷுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய சென்னை மாநாகராட்சி, பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மேலும், துள்ளுவதோ இளமை படம் தொடர்பான தணிக்கை சான்றிதழும் ஆவணமாக கேட்டிருந்த நிலையில், இந்த சான்றிதழ்கள் வராத நிலையில், வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என தள்ளுபடி செய்து உள்ளனர். இது ஏற்புடையது அல்ல. எனவே, உயர்நீதிமன்றத்தில் போலி ஆவனங்கள் தாக்கல் செய்த நடிகர் தனுஷ் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை விசாரிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சீராய்வு  மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் தனுஷ் தனது மகன் தான் என மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கில், போலியான பிறப்பு மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி