நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி அவரது ரசிகர்கள் 30 பேர் மதுரையில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.
துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், மதுரையில் நடிகர் விஜய்யின் திரைப்படம் ஒவ்வொரு முறையும் வெளிவரும் பொழுது வெற்றியடைய வேண்டி அவரது ரசிகர்கள் போஸ்டர் அடிப்பது, பால் குடம் எடுப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதை ஒட்டி எதுகை மோனை வசனங்களுடன் இருவரது ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர் அடித்து வருகின்றனர்.
மதுரையில் நாளுக்கு நாள் இரு தரப்பு ரசிகர்களும் போஸ்டர் அடிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் ரசிகர் மன்றத்தினர் துணிவு திரைப்படம் வெற்றியடைய வேண்டி பரவையில் அமைந்துள்ள ஏகாம்பரஸ்வரர் கோவிலில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் பரவை கார்த்தி தலைமையில் மதுரையிலிருந்து பழனிக்கு பாதையாத்திரையாக கிளம்பிச் சென்றனர்.
Also read... கொடுவா படத்தின் டீசரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Ajith fans, Thunivu