‘திருவிழாவுக்கு நாள் குறிச்சாச்சு’ அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

‘திருவிழாவுக்கு நாள் குறிச்சாச்சு’ அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்

போனி கபூரின் ட்விட்டர் பதிவை பல இடங்களில் போஸ்டராக அச்சிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் அஜித் ரசிகர்கள்

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

முருக கடவுள் தொடங்கி பிரதமர், முதலமைச்சர், கிரிக்கெட் வீரர்கள் என முக்கிய பிரபலங்கள் பலரிடம் தொடர்ச்சியாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில் அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று ட்வீட் செய்தார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் எப்போதும், எதையும் வித்தியாசமாகவும், கொண்டாட்டமாகவும் அணுகும் மதுரை ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்தும் வித்தியாசமாக போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.டெம்பிள் சிட்டி அஜித் ஃபேன்ஸ் என்ற அமைப்பினர், போனி கபூர் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவை அப்படியே போஸ்டராக மாற்றி ‘திருவிழாவுக்கு நாள் குறிச்சாச்சு’ என்ற வாசகத்துடன் மதுரையின் பல இடங்களில் ஓட்டியுள்ளார்கள்.அறிவிப்புக்கே இப்படி ஆரவாரம் காட்டும் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் எப்படி கொண்டாடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published: