Home /News /entertainment /

90'ஸ் வைபில் ஒரு பாடல்... விருமன் படத்தின் மதுரவீரன் பாடல் முன்னோட்டம்!

90'ஸ் வைபில் ஒரு பாடல்... விருமன் படத்தின் மதுரவீரன் பாடல் முன்னோட்டம்!

விருமன் பாடல்

விருமன் பாடல்

நாளை மதுரையில் விருமன் படத்தின் பாடல்களும், ட்ரைலரும் வெளியிடப்படுகிறது.

    விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள ’மதுரவீரன்’ பாடலின் முன்னோட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

    இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கொம்பன்'. நடிகர் கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். கிராமத்து கதையை மையப்படுத்திய இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளது.

    சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தந்தை-மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள விருமன் படத்தில், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



    முதல்வரை நேர்ல பாத்துட்டேன்... செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் பாடியது குறித்து கிடாக்குழி மாரியம்மாள்!

    இதற்கிடையே நாளை மதுரையில் விருமன் படத்தின் பாடல்களும், ட்ரைலரும் வெளியாவதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இந்நிலையில் தற்போது விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரவீரன் என்ற பாடலின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் பாடலை தனக்கு மிகவும் பிடித்த பாடலென்று சூர்யாவும், 90’ஸ் வைப்ஸ் என கார்த்தியும் குறிப்பிட்டுள்ளனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து அதிதி ஷங்கரும் பாடியுள்ளார். இதன் மூலம் நடிகையாக மட்டுமல்ல, பாடகியாகவும் விருமன் படத்தில் அதிதி ஷங்கர் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi, Yuvan Shankar raja

    அடுத்த செய்தி