Home /News /entertainment /

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மெட்ராஸ் டாக்கீஸ்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மெட்ராஸ் டாக்கீஸ்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அமரர் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்னம் இரு பாகங்களாக எடுக்கிறார். அதில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படம் திரையரங்குகளுக்கு பதில் ஓடிடி-ல் நேரடியாக வெளியாகிறது என சில தினங்களாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மறுத்துள்ளது. பொன்னியின் செல்வனை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகாவும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த இரு பாகங்களும் சேர்த்து 500 கோடிக்கு மேல் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!

முதல் பாகம் இந்த வருட கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஒரு பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ரவிவர்மன். பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. முக்கியமாக திரையரங்குகளுக்கும், விநியோகஸ்தர்களுக்கும். இது போன்ற பிரமாண்ட படங்கள் தான் இப்போது ரசிகர்களை திரையரங்குகளுக்கு வர வைக்கின்றன. அவையும் ஓடிடியில் வெளியானால் திரையரங்குகளின் நிலைமை பரிதாபமாகிவிடும்.

இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?

ஆனால் இது வெறும் வதந்தி தான் உண்மை இல்லை என மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளரான சிவ ஆனந்த் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் முதலில் திரையரங்கில் வெளியாகும். அதன் பிறகே ஓடிடி வெளியீடு என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Mani rathnam, Mani ratnam

அடுத்த செய்தி