விஷாலின் மனுவை விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதியிடம் கோரிக்கை...! ஐசரி கணேசனுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

news18
Updated: July 29, 2019, 12:24 PM IST
விஷாலின் மனுவை விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதியிடம் கோரிக்கை...! ஐசரி கணேசனுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஐசரி கணேஷ்
news18
Updated: July 29, 2019, 12:24 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜூன் 22-ம் தேதி விசாரித்தார்.

அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாமென சங்கரதாஸ் சுவாமிகள் அணியின் பொது செயலாளர் வேட்பாளரான ஐசரி கணேசும், அனந்தராமன் ஆகியோரும் நீதிபதியை அணுகியுள்ளனர்.


இதுதொடர்பாக இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பதில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக மாநில சட்டப்பணிகள் ஆணைய குழு மூலமாக ரூ.10 லட்சம் பணத்தை 2 வாரங்களில் செலுத்த உத்தரவிட்டு இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

Loading...

Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி... பியர் கிரில்ஸ் உடன் ஒரு சாகசப் பயணம்!

வீடியோ பார்க்க: கென்னடி கிளப் நடிகர்களைப் புகழந்த பாரதிராஜா!

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...