நயன்தாரா படத்தை வெளியிட இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு!

நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜின் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

news18
Updated: June 11, 2019, 2:02 PM IST
நயன்தாரா படத்தை வெளியிட இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு!
நடிகை நயன்தாரா
news18
Updated: June 11, 2019, 2:02 PM IST
கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் வாங்கியுள்ளார் பாலாஜி குமார். இவர் முன்னதாக விடியும் முன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள படத்தை ஜீன் 14-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக விளம்பரங்கள் வெளியானது.

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா? நயன்தாராவின் அசத்தல் போட்டோஸ்!

தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என பாலாஜி குமார் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜின் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

Also see...

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...