விஸ்வாசம் படத்துக்கான தடை நீக்கம் - நீதிமன்றம் உத்தரவு!

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா ரூ.78 லட்சம் கடன் பாக்கியை திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

news18
Updated: January 9, 2019, 4:34 PM IST
விஸ்வாசம் படத்துக்கான தடை நீக்கம் - நீதிமன்றம் உத்தரவு!
அஜித்
news18
Updated: January 9, 2019, 4:34 PM IST
விஸ்வாசம் படத்தை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள படம் விஸ்வாசம். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை இந்தப் படம் ரிலீசாகிறது. பேட்ட படத்துடன் சேர்ந்து விஸ்வாசம் வெளியாவதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா ரூ.78 லட்சம் கடன் பாக்கியை திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இத்தடையை நீக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மதியம் நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

சாய்பாபா பெற்று இருந்த கடன் பாக்கி ரூ.78 லட்சம் ரூபாயில் முதலாவதாக ரூ.35 லட்சத்தை திருப்பித் தர சம்மதம் தெரிவித்ததாகவும், மீதமுள்ள பணத்தை 4 வாரங்களுக்குள் தருவதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்ததை அடுத்து இந்த வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் விஸ்வாசம் படத்தை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.

பேட்ட VS விஸ்வாசம்... ரிலீஸுக்கு முன்னரே லாபத்தை ஈட்டும் திரைப்படம் - வீடியோ
Loading...
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...