தமிழ் ராக்கர்சில் நேர்கொண்ட பார்வை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நேர்கொண்ட பார்வை படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

news18
Updated: August 6, 2019, 4:50 PM IST
தமிழ் ராக்கர்சில் நேர்கொண்ட பார்வை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நேர்கொண்ட பார்வை
news18
Updated: August 6, 2019, 4:50 PM IST
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் நடித்துள்ள படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் பே வியூ (Bay View) புராஜெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ள படத்தை 1129 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Also read... நேர்கொண்ட பார்வை படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்


இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளதோடு, படம் சம்பந்தப்பட்ட அனைத்துக் காப்புரிமைகளும் தங்கள் வசம் உள்ள நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களிலோ அல்லது கேபிள் டிவி-களிலோ படத்தை வெளியிட்டால் அது மிகப்பெரிய மன உளைச்சலையும், பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என வாதிட்டார்.

மனுதாரர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நேர்கொண்ட பார்வை படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Also see...

Loading...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...