Home /News /entertainment /

விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

கமல் நடித்துள்ள விக்ரம் படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பத்தல பத்தல பாட்டில் மத்திய அரசை விமர்சித்து வரிகள் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பத்தல பத்தல பாடலைத் தொடர்ந்து விக்ரம் படத்திலிருந்து போர்க்கண்ட சிங்கம் என்ற 2வது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருப்பதால் விக்ரம் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போதும் உச்ச கட்டத்தில் இருக்கிறது.

Also read... ஏய் சண்டக்காரி... நடிகை ரித்திகா சிங்கின் நியூ லுக் - வைரலாகும் போட்டோஸ்

விக்ரம் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், விக்ரம் படம் மிகப்பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானால் மிகப்பெரும்‘ நஷ்டம் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்ரம் படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க - Pooja Hegde: பீஸ்ட் பூஜா ஹெக்டேவா இது? நடிக்க வர்றதுக்கு முன்னாடி இருந்த லுக்!

விக்ரம் படம் அடுத்த வாரம் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில், விரைவில் படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Madras High court, Vikram

அடுத்த செய்தி